கீழக்கரை S.N.தெருவைச் சேர்ந்த எஸ். ஏ. ஸஹீருதீன் அவர்கள் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர். சமூக பணிகளில் ஆர்வமுடைய இவர் சமூகம் தொடர்பான கட்டுரைகள் எழுதி வருகிறார்
கீழக்கரை !!! ஆண்டுகள் பல கடந்து நிற்கும் பள்ளிவாசல்கள், இம்மாவட்டதிற்கே கல்வி ஒளி தரும் பல்துறை சார்ந்த கல்லூரிகள்; இதில் மகளிருக்கென ஒரு தனி கல்லூரி, சரித்திரம் போற்றும் கொடை வள்ளல்கள், அரிவிற்சிறந்த கல்வியாளர்கள், பெரும் தொழில் அதிபர்கள் என ஆயிரம் ஆண்டு கால பெருமையை தாங்கி நிற்கும் ஒரு ஊர். இவ்வூரைச் சேர்ந்த நான் எனது மேற்படிப்பிற்காக வெளிவூரில் தங்கி இருந்த பொழுது உடன் படிக்கும் சக நண்பர்களின் வீட்டிற்கு செல்வதுண்டு, அப்பொழுது என்னை அறிமுகப்படுதிக் கொள்ள விளையும் நான், எங்கே நமது ஊர் பெயரைச் சொன்னால் சட்டென பிடிபடாதோ என்று, நான் இராமேஸ்வரம் அருகில் இருக்கும் ஒரு ஊரைச் சார்ந்தவன் என கூறுவதுண்டு.
கீழக்கரை !!! ஆண்டுகள் பல கடந்து நிற்கும் பள்ளிவாசல்கள், இம்மாவட்டதிற்கே கல்வி ஒளி தரும் பல்துறை சார்ந்த கல்லூரிகள்; இதில் மகளிருக்கென ஒரு தனி கல்லூரி, சரித்திரம் போற்றும் கொடை வள்ளல்கள், அரிவிற்சிறந்த கல்வியாளர்கள், பெரும் தொழில் அதிபர்கள் என ஆயிரம் ஆண்டு கால பெருமையை தாங்கி நிற்கும் ஒரு ஊர். இவ்வூரைச் சேர்ந்த நான் எனது மேற்படிப்பிற்காக வெளிவூரில் தங்கி இருந்த பொழுது உடன் படிக்கும் சக நண்பர்களின் வீட்டிற்கு செல்வதுண்டு, அப்பொழுது என்னை அறிமுகப்படுதிக் கொள்ள விளையும் நான், எங்கே நமது ஊர் பெயரைச் சொன்னால் சட்டென பிடிபடாதோ என்று, நான் இராமேஸ்வரம் அருகில் இருக்கும் ஒரு ஊரைச் சார்ந்தவன் என கூறுவதுண்டு.
சற்று விளக்கதுடன் கீழக்கரை என்று கூறினால். ‘’ஓ ! கீழக்கரையா ? பெரிய 'பெரிய பாய் மாருகள்' இருக்கும் ஊராச்சே!!’’ என்று அங்கு உள்ள வயதில் பெரியவர்கள் பரிச்சயத்துடன் கேட்பார்கள் !! ஆனால் எனது நண்பர்களுக்கோ அல்லது அவர்களின் பெற்றோர்களுக்கோ கீழக்கரையை தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் நான் வெளி ஊர்களில் சந்தித்த பெரியவர்கள் கீழக்கரையை நன்றே அறிந்து வைத்து இருந்தது எனக்கு சற்று வியப்பையே தந்தது. மிக சமீபத்தில் படிப்பை முடித்து விட்டு, சென்னையில் தற்போது பணி செய்யும் நான் இம்முறை நோன்பு பெருநாளைக்காக கீழக்கரைக்கு வந்த பொழுது... நான் பிறந்து, வளர்ந்து, பார்த்து, பழகிய கீழக்கரையை மேற்கூறிய அனுபவங்கள் சற்று மாறுபட்ட கோணத்துடன் பார்க்க தூண்டியது.
கீழக்கரைக்கு வந்திறங்கிய அந்த காலை பொழுதினில் சற்றே சலசலத்த சத்தத்தால் விழித்த எனக்கு வீட்டில் பெரியவர்கள் பேசிக் கொண்டு இருந்தது என் காதில் கணீரெனே ஒலித்தது. ’மோட்டார்ல தண்ணி ஏரல, கிணத்துல தண்ணி இல்லயாம், அர ஒர தான் தண்ணி கெடக்குதாம் !! மழையும் இலல, அப்படியே மழை பேன்ஞ்சாளும் தண்ணி மன்னுக்குள்ளயா போகுது ? சிமிண்டு ரோடு போட்டு ஒரு தண்ணியும் மண்ணுக்குள்ள போக மாடிக்குது !!! அந்த காலத்துலைலாம் இப்புடியா இருந்துசி ? தெருவெல்லாம் மண்ணுக்காட கெடக்கும், வெருங்கால்ல நடக்கவே பிருசமா இருக்கும் !!! ஹ்ம்ம்….’’ என்ற ஒரு பெரு மூச்சு.
நோன்புப் பெருநாள், காலத்தின் வேகத்தில் சட்டென ஒட... கீழக்கரை மஜீதா மைந்த்தன் அவர்கள் எழுதிய புத்தகத்தில் இடம் பெற்ற ‘’காணாத காட்சி’’ சிறு கதையை படித்த எனக்கு அக்கதையில் வரும் வர்ணனைகள் ஒரு கணம், கீழக்கரையின் சற்றே பழமையான வாழ்க்கை முறையினையும், பழம் பெருமையயும் அழகாக கண்முன் கொண்டு வந்து நிறுத்தியது.அதனால்..
அன்று இரவு பெரிதும் யோசித்த நான். மறுநாள் காலையில், இத்தனை நாள் ஏதேதோ ஊர்களை எல்லாம் சுற்றி பார்க்க ஆசை பட்டவன்... இன்று கீழக்கரையை சுற்றிப் பார்க்க வேண்டும் என தோன்றியது. மறுநாள் காலை விடிய.. பட்டென கால்கள் வெளியில் நகர்ந்தது. அறிந்த தெரிந்த இடங்கள் என கால் போன போக்கில் எல்லாம் போன எனக்கு கண்ணில் பட்டவைகள் அனைத்தயும் மனது படம் எடுத்து வைத்து கொண்டது.
பல துறைகளிலும் வளர்ச்சி பெற்றதாக தோன்றுகின்ற கீழக்கரை உண்மையிலேயே பலன் தரக்கூடிய ஒரு வளர்ச்சியை பெற்றுள்ளதா?? இல்லை.. ஒரு சரியான தனிமனித மற்றும் சமூகம் சார்ந்த ஒரு வளர்ச்சியை நோக்கி செல்கின்றதா..? என்ற கேள்வி சற்றே எனக்குள் மேலோங்கியது. அவ்வாறு தொலைநோக்கில் சமூகத்திற்கு பயன் தரக்கூடிய ஒரு சரியான திட்டம் சார்ந்த வளர்ச்சி சில துறைகளில் தேவை என தோன்றியது.
முதலில் நகரின் சுத்தம் மற்றும் சுகாதரம் சார்ந்த துறையில் முன்னேற்றம் தேவையென எனக்குத் தோன்றியது. தெருக்களிள் பார்த்த இடமெல்லாம் குப்பைகள், ஈக்கள் மொய்க்கும் கழிவுகள் என சுத்தம் என்பது நாடு கடத்தப்பட்டே இருந்தது. இதற்கு நான் வழக்கம் போல் குறை கூற விரும்பவில்லை. இதற்கு நமது ஊர் மக்களின் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்கள் மிக முக்கியமான ஒரு காரணமாக அமைகிறது என்பது மறுக்க முடியாத ஒரு உன்மை.
வெல்ஃபேர் மற்றும் நகராட்சியில் இருந்து வந்து தெருக்களை சுத்தம் செய்வார்கள், நமக்கென்ன..? என்ற சுத்தம் பற்றிய கவலையின்மை நம் மக்களிடையே மிக அதிகம். அவரவர் வீட்டு வாசலை அவரவர் சுத்தமாக வைதிருக்க எண்ணம் கொண்டு சிறு முயற்சி எடுத்தாலே போதும். தெருக்கள் சுத்தம் பெறும். இந்த முயற்சி ஒன்றே தீங்கு விளைவிக்கும் பல நோய்களை விட்டும் தூரமாக வாழ்வதற்கு வழிவகை செய்யும்.
வளர்ச்சி பெறவேண்டிய அடுத்த துறை கல்வி. இத்துறையில் நமதூர் மக்கள் பெரிதும் வளர்ச்சி கண்டதாக தோன்றினாலும் அதன் பலன் என்பது சற்று குறைவாகவே இருக்கின்றது. ஜார்ஜ் என்ற ஒரு மேல் நாட்டு அறிஞர் ‘’கல்வி என்பது சிறந்த மனிதனை உருவாக்கவே அன்றி ஒரு அற்ப வேலையை தரும் வழி அன்று’’ என்று கூறினார். இத்தகைய ஒரு பலன் தரக்கூடிய கல்வி மிகக்குறைவு.
இந்த சமூகத்தில் இருந்து சிறந்த ஒரு கல்வியின் மூலம் உயர்பதவிகளிள் இருந்து இந்த பகுதிக்கு பல நண்மைகளை செய்யும் வகையில் IAS, IPS, CA போன்ற சிறப்பு மிக்க கல்விக்காக நமது மக்களை தயார் செய்ய வேண்டும். ஆறிவு கூர்மை நிறைந்த பல மாணவ மற்றும் மாணவிகள் நமது ஊரில் மிக அதிகம். இவர்களை அடயாளம் கண்டு சரியாக வழி நடத்தினால் அதன் விளைவு பெரும் பயன் தரும். அடுத்ததாக வளர்ச்சி வேண்டிய ஒரு முக்கியமான ஒன்று, அரசியல் மாற்றத்தின் மூலமாக அடையக் கூடிய ஒருங்கினைந்த சமூக முன்னேற்றம் ஏற்பட ஏதுவாக அமையும்.
கீழக்கரையின் இத்தனை ஆண்டுகால அரசியல் வரலாற்றில் பல சிறப்பு மிக்க தலைவர்களை பார்த்து இருக்கிறோம். இனி வரக்கூடிய காலங்களில் படித்த துடிப்புமிக்க இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து, பெரியவர்கள் வழி நடத்த, வழிமையும் புதுமையும் மிகுந்த ஒரு வழுவான அரசியல் மாற்றத்திற்காக முயற்சிகள் வேண்டும். ஊரின் பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த வளர்ச்சி மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினையாக இருக்கின்றது. இதற்கு சரியான ஒரு எடுத்துக்காட்டு ஊரில் புதிதாக பெரும் செலவில் கட்டிய கடற்கரை பாலம். மிக குறுகிய காலத்திலேயே பராமரிப்பற்று சேதம் அடைய தொடங்கி விட்டது.
இரவு நேரங்களில் போதிய விளக்குகள் இன்றி மிகவும் ஆபத்தான ஒரு இடமாகவும் சமூக விரோதிகளுக்கு ஒரு உறைவிடமாகவும் மாறி இருக்கின்றது. புதிய பாலம் போன்ற கட்டமைப்புகளை சரிவர மேம்படுத்தி அழகு சேர்க்காவிட்டாலும், அது பழுதடைந்து பயனற்று போகும் நிலை எற்படாமல் பராமரிப்பு செய்வது நமது கடமை ஆகும்.
இது போல் இன்னும் ஆயிரம் உண்டு !!
இது அனைத்துக்கும் பாடுபடும் வகையில் கீழக்கரையின் வளர்ச்சிக்கென ஒரு குழு அமைக்கப்பட வேண்டும்.
அந்த குழுவானது மற்ற அமைப்பு மற்றும் மதம் சாரா படித்த இளைஞர்கள், வெளிநாடுகளில் பணியில் இருக்கும் சகோதரர்களை கொண்டு ஒரு வலிமையும் துடிப்பும் மிக்க கலப்பற்ற ஒரு குழுவாக உருவாக்க வேண்டும்.
பெருமைவாய்ந்த கீழக்கரை முன்னேற்றத்தின் மூலமாக இனி வரக்கூடிய தலைமுறைகளும் இவ்வுலகில் அறியட்டும்.
ஆயிரம் மைல் தொலைவு கொண்ட பயணமாக இருந்தாலும் அதன் தொடக்கம் முதல் அடியிலேயே !!
சிறு துளி பெரு வெள்ளம் !! இந்த முயற்சி சமூக முன்னேற்றத்திற்கு வித்திடடும் !!
விளைவோம் ஒரு சிறந்த சமூக கட்டமைப்பை நோக்கி.. இன்ஷா அல்லாஹ் !!
ஆக்கம் : ஸஹீருதீன் எஸ். ஏ.
FACE BOOK COMMENTS :
- AbDul Hameed, Ahsan Kareem, Nufil Ibrahim and 13 others like this.
- கீழக்கரை 'புதிய ஒற்றுமை' நல்ல சிந்தனை கட்டுரை. கீழக்கரை என்றால் ஆஹோ ஓஹோ என்று கூப்பாடு போடும் நம் மண்ணின் மக்கள், இன்னும் இங்கு நடந்தேற வேண்டிய நல்ல மாற்றங்கள் குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை. இது போன்று சமூக அக்கறையுடன் எழுதும் கீழக்கரை இளைஞர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது உளம் மகிழ்கிறது.
- Keelai Ilayyavan நம் இளைஞர்கள் இன்னும் இது போன்று பல தலைப்புகளில் சமூக நலன் தாங்கிய கட்டுரைகளை எழுத முன் வர வேண்டும். அவ்வாறு எழுதப்படும் கட்டுரைகள், கவிதைகள், சிந்தனை சிதறல்கள் எதுவாகினும் கீழ் காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பித் தரும் படி கேட்டுக் கொள்கிறேன். salihhussain.ks@gmail.com
- Rajakhan Mohamed இளம் எழுத்தாளனும், சமூக சிந்தனையாளனுமாகிய, தம்பி சஹீருதீனுக்கு என் வாழ்த்துகள்...ஆயிரம் போர்வாற்கள் சாதிக்காததை ஒரு பேனா முனை சாதிக்குமென்பார்கள்...அப்படித்தான் இருக்கிறது உன் கட்டுரையும். மென்மேலும் இது போன்று சீரிய கருத்துக்களை பகிர வாழ்த்தி, இது போன்ற இளைஞர்களுக்கு தளம் அமைத்துக் கொடுக்கும் நண்பன் யாசீன், மற்றும் தம்பி கீழை இளையவன் ஆகியோரையும் மனதாரப்பாராட்டுகிறேன்...
- Saheerudeen Klk Assalamu Alaikkum vrah..
Anbu Sagodharargale ! Ungaludaya Valthukkalukkum & Aravanaippirkkum Mikka Nandri ! Irudhiyil Ikkatturayin Moolam Nan Iraivanidam venduvadhu, ippadaippu oru padhivaaga mattume ninruvidakkudadhu enbadhu dhan ! Kaalam kalamaga "Vaaimaiye Vellum" ena marappalagayil eludhi thonga vidappattulladhe thavira manidhanin valkaiyilo alla awanin seyalpaatilo kaanamudiyavillai.. Eluththu Eluththaagave Irukkindradhu.. Indhappadhivum Verum Oru Eluthaagave Nindru Vidavendaam... Vilaivom Oru Sirandha Samooga Kattamaippai Nokki ! Insha Allah !