Saturday 28 January 2012

சமைத்து பாருங்கள் - "ஆட்டு மூளை பொரியல்"

இராமநாதபுரத்திலிருந்து 'குயீன் கல்யாண பிரியாணி' அன்சாரி அவர்கள் வழங்கும் சமையல் குறிப்பு


ஆட்டு மூளையா... எப்டியிருக்குமோ-னு யோசிக்கிறீங்களா...? செய்து சாப்பிட்டு பாருங்களேன்.. ருசி பிரமாதமாயிருக்கும். அதுமட்டுமில்லங்க, ஆட்டு மூளையில் கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு. அதில் உள்ள பாஸ்பரஸ் கிட்னியில் உள்ள கசடுகளை சுத்தம் பண்ணுவதால் உடலுக்கு இது மிகவும் நல்லது. நீங்களே ட்ரை பண்ணிப் பார்த்துட்டு சொல்லுங்க.......




தேவையான பொருள்கள்: 

ஆட்டு மூளை - 2
மிளகாய்தூள் - 1-1/2 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
வெங்காயம் - 1/2 கப்
சோம்பு - 1/2 ஸ்பூன்
எண்ணைய் - 3 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை: 

* ஆட்டு மூளை மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேகவிடவும்.

* அடிக்கடி மூளையைப் புரட்டி போடவேண்டும். இல்லாவிட்டால் அடியில் பிடித்து விடும்.

* மூளை நன்றாக வெந்தபின், இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அதோடு மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பை கலந்து மெதுவாக குலுக்கி வைக்கவும்.

* பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

* வாணலியில் அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்.

* பொன்னிறமாக சிவந்தவுடன் மூளையை இந்த மசாலாவுடன் சேர்த்து மிகவும் மெதுவாக கிளறவேண்டும்.

* நன்றாக சிவந்தவுடன் இறக்கி பறிமாறலாம்.

நன்றி அன்சாரி அவர்களே ! 

'இளைய தலைமுறையும், இந்தியாவின் வளர்ச்சியும்'

துபாயில் இருந்து அஹமத் அஸ்பாக் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் சிறந்த ஆங்கில கட்டுரை 


பக்கம் 1

பக்கம் 2

பக்கம் 3
 நன்றி : UNIVERSAL EDUCATION - மாத இதழ்

நல்ல கனவு

கீழக்கரையில் இருந்து ஆசிரியர் சரவணன் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்ளும் சிந்தனை சிறுகதை 



நன்றி : புதிய தலை முறை (சமூக விழிப்புணர்வு வார இதழ்)

                                                     நன்றி ஆசிரியர் சரவணன் அவர்களே !

Friday 27 January 2012

"வேலை தேடுபவர்களுக்கு உதவும் தளம்"

கீழக்கரையில் இருந்து ஜமால் அவர்கள் தரும் வேலை தேடுவோருக்கான தகவல்

வேலை தேடுபவர்களின் முதல் வேலை bio-data. அதன் முக்கியத்துவம் நன்றாகவே தெரியும். இது தற்போது Resume என்றும் CV என்றும் பல பெயர்களில் பரிணாமம் அடைந்திருக்கிறது. Bio-data பளிச் என்று பக்காவாக இருந்தால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் என்பதும் வேலை தேடும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அதனை தயாரிப்பது எப்படி என்பது தான் நம்மில் பலருக்கு இன்னும் முறையாக தெரியாமலிருக்கிறது.





Bio-data விரிவாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுவதை தவறாகப் புரிந்து கொண்டு பக்கம் பக்கமாக bio-dataவை தயார் செய்தால் அது எதிர்பார்த்த பலனை தர வாய்ப்பில்லை. அதே போல கூடுதல் அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது சேர்த்துக் கொண்டால் bio-data போல இருக்காது. இது போன்ற பிரச்சனைகளை களைய நமக்கு ஒரு இனைய தளம் உதவியாக இருக்கப் போகிறது.




பக்காவான, செயல்திறன் மிக்க bio-dataவை உருவாக்கி கொள்ள உதவுவதாக கூறும் இந்த தளம், மிக அழகாக அதனை செய்தும் த‌ருகிற‌து. அதையும் சுலபமாக, உடனடியாக செய்து தருகிறது. இந்த தள‌த்திற்கு வந்த பின் ஒரு ந‌ல்ல bio-data எப்படி இருக்க வேண்டும் என்ற கவலையோ, குழப்பமோ தேவையில்லை. அதை இந்த தளம் பார்த்துக் கொள்கிறது. வேலை தேடுபவரின் நோக்கம், கல்வி தகுதி, பணி அனுபவம் போன்ற‌ விவரங்களை சமர்பித்தால் போதும் அதைக் கொண்டு அழகான bio-data தயாராகி விடுகிற‌து. இதில் நாலைந்து வகையான பொதுவான template-கள் bio-dataவுக்கு இருக்கின்ற‌ன. அவற்றில் விருப்பமானதை தேர்வு செய்து கொள்ளலாம்.




துறைவாரியாக சம்பிக்கப்பட்ட bio-dataக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எல்லாமே ஒரே பக்கம் மட்டுமே இருக்கின்றன. அந்த ஒரு பக்கத்திலேயே வேலைக்கு விண்ணபிப்பவர் பற்றி தெரியவேண்டிய அனைத்து விவரங்களும் வந்து விடுகின்ற‌ன. பயோடேட்டா என்பது வேலை தேடுபவரின் அறிமுக அட்டை என்றால் இந்த தளம் உருவாக்கி த‌ருபவை அதை கச்சிதமாக நிறைவேற்றுகின்றன. PDF கோப்பாக மாற்றிக்கொள்ள‌லாம்.




இணையத்தின் மூலம் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். Bio-dataக்கள் நிறுவனங்களால் எத்தனை முறை பார்க்கப்பட்டுள்ளன போன்ற விவரங்களையும் தெரிந்து கொள்ள‌லாம். வேலை வாய்ப்புக்கான பயனுள்ள குறிப்புகளும் வழங்கப்படும். பொருத்தமான வேலை வாய்ப்பு பற்றிய தகவலும் தெரிவிக்கும் வசதியும் இருக்கிற‌து. வேலை தேடுபவர்களுக்கு கைகொடுக்க கூடிய தளம் என்ப‌தில் சந்தேகமில்லை.

தளத்தின் முகவரி :
http://www.resumebaking.com/"

நன்றி ஜமால் அவர்களே !

Wednesday 25 January 2012

மதுரையில் இருந்து அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று தினத் தந்தி  நாளிதழில் தான் படித்த விழிப்புணர்வு விளம்பரத்தை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.


நன்றி : தினத் தந்தி நாளிதழ் -25.01.2012
                                                     நன்றி அப்துல் ரஹ்மான் அவர்களே!

எனக்கு சாவே வராது

கீழக்கரையில் இருந்து ரசீன் அஹமத் அவர்கள் தரும் நகைச்சுவை சிறுகதை

நன்றி : புதிய தலைமுறை (சமூக விழிப்புணர்வு வார இதழ்)

                                                                                     நன்றி ரசீன் அவர்களே !

சமைத்து பாருங்கள் - பனீர் வெஜ் மின்ட் கறி

இராமநாதபுரத்திலிருந்து 'குயீன் கல்யாண பிரியாணி' அன்சாரி அவர்கள் வழங்கும் சமையல் குறிப்பு 




எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்!



தேவையான பொருட்கள்:


பட்டாணி - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பனீர் - 100 கிராம்


வதக்கி அரைக்க

புதினா - ஒரு கட்டு
கொத்து மல்லி - அரை கட்டு
கருவேப்பிலை - கால் கட்டு
பச்ச மிளகாய் - நான்கு
இஞ்சி - ஒரு லெமென் சைஸ்
பூண்டு - 5 பல்
வெங்காயம் - முன்று
தக்காளி - நன்கு
எண்ணை - ஒரு டேபிள் ஸ்பூன்



தாளிக்க: 


எண்ணை - தேவையான அளவு
சீரகம் - சிறிதளவு


செய்முறை:

 * முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்ச மிளகாயை வதக்கவும்.

* கடைசியாக கொத்துமல்லி, புதினா, கருவேப்பிலையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.

* வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

* எண்ணையை காய வைத்து சீரகம் தாளித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பனீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* காய்களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

* இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

* சுவையான ஆரோக்கியமான மின்ட் கறி ரெடி.


நன்றி அன்சாரி அவர்களே ! ( தங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்...)

Tuesday 24 January 2012

இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பற்றிய சில தகவல்கள்

கீழக்கரையில் இருந்து ஜமால் அவர்கள் தரும் சுவையான தகவல்  




முதன் முதலில் அமெரிக்க ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட இணையம் தற்பொழுது உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி இப்பொழுது உலகையே தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. வணிகம், வங்கியின் செயல்பாடுகள் மற்றும் அனைத்து துறைகளும் இப்போது இணையத்தின் கட்டுப்பாடினுள் வந்து வேகமாக வளர்ந்து வருகின்றன.




இணையம் இருப்பதால் உலகில் எந்த மூலையில் நடப்பதையும் ஒரு நொடிப்பொழுதில் அறிகிறோம் மற்றும் இதன் வசதிகளை சொல்லி மாளாது. இணையப் பயன்பாடு நம் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது. அதைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை கீழே காணலாம்.

இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய சில தகவல்கள்:
  • செப்டெம்பர் 2011 கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 112 மில்லியனாகும். இதில் 88 மில்லியன் நகரங்களில் இருந்தும் 24 மில்லியன் மக்கள் கிராமங்களில் இருந்தும் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.
  • கடந்த வருடத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தல் எண்ணிக்கையில் 13% வளர்ச்சி ஏற்ப்பட்டுள்ளது. இதே வளர்ச்சி நீடித்தால் டிசம்பர் 2011க்குள் இந்த எண்ணிக்கை 121 மில்லியன் பயனாளர்களை தாண்டும்.
  • இந்த 112 மில்லியன் பயனாளர்களில் 90மில்லியன் பேர் மாதத்திற்கு ஒரு முறையாவது இணையத்தை உபயோகிக்கின்றனர்.
  • 26.3 மில்லியன் மக்கள் தங்கள் மொபைல் மூலமாக இணையத்தை உபயோகிக்கின்றனர்

  • இளைஞர்கள் தான் இணையத்தை அதிகமாக உபயோகிக்கின்றனர். மற்றும் 18 வயதுக்கு குறைவான பயனாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
  • இணையத்தில் ஈமெயில்(89%), சமூக வலைத்தளங்கள்(71%), கல்வி சம்பந்தமாக(64%), பாடல்,வீடியோ(49%) மற்றும் நண்பர்களுடன் அரட்டை(55%) போன்ற வசதிகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
  • 79மில்லியன் பயனாளர்கள் இணையத்தை வாரம் ஒருமுறை இணையத்தை உபயோகிக்கின்றனர்.
  • இந்தியாவில் மும்பையில் தான் அதிகளவு (8.1 மில்லியன்) இணையத்தை பயன்படுத்துகின்றனர். சென்னை நான்காம் (2.9 மில்லியன்) இடத்தில் உள்ளது.
நன்றி ஜமால் அவர்களே !

Sunday 22 January 2012

மல்டி லெவல் 'மாய வலை' - விழிப்புணர்வு உஷார் கட்டுரை

கீழக்கரையில் இருந்து பவுசுல் அமீன் அவர்கள் ஆனந்த விகடன்
வார இதழில் வெளி வந்த 'உஷார் கட்டுரை'யை, நம் விழிப்புணர்வுக்காக தருகிறார்.


நன்றி : ஆனந்த விகடன் வார இதழ் ( எனர்ஜி பக்கங்கள் )


1

2

3
நன்றி.. பவுசுல் அமீன்... அவர்களே !

படிக்க, படிக்க நீங்களும் படித்த பல நல்ல விசயங்களை இந்த தளத்தில் இடம் பெற செய்ய தோணுதா?   salihhussain.ks@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, (உங்கள் புகைப்படத்துடன்)  அனுப்பி உங்கள் மேலான ஆதரவை எங்களுக்கு அளியுங்கள். 

Friday 20 January 2012

நமக்காகவே வாழ்ந்த பெற்றோர்கள் !

துபாயிலிருந்து அஹமது அஷ்பாக் அவர்கள் 'புதிய தலை முறை' வார இதழில் தான் படித்த அருமையான, சிந்திக்க வைக்கும் சிறுகதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

நன்றி : புதிய தலை முறை (சமூக விழிப்புணர்வு வார இதழ்)

 நீங்கள் படித்த நல்ல பல அறிய தகவல்களை, நீங்கள் நம் நண்பர்களுக்கு சொல்ல நினைக்கும் முக்கிய விசயங்களை, உடனே இந்த வலை பதிவில், இடம் பெற செய்ய கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு, (உங்கள் புகைப்படத்துடன்)  அனுப்பி உங்கள் மேலான ஆதரவை எங்களுக்கு அளியுங்கள். நீங்கள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் உங்கள் பெயரிலேயே இந்த தளத்தில் பதிவு செய்யப்படும்.

மின்னஞ்சல் முகவரி :  salihhussain.ks@gmail.com

Monday 16 January 2012

கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு...


என் அன்பிற்கினிய நண்பர்களே !

மனிதனை அறிவுலகத்துக்கு இழுத்துச் செல்வது நல்ல புத்தகங்களே. அவை மனிதனைப் புனிதனாக்கிப் பண்படுத்துகின்றன. புத்தகங்களே மனிதனின் நல்ல நண்பர்கள். “கல்வி கரையில, கற்பவர் நாள் சில என்பது ஆன்றோர் வாக்கு. சான்றோர்களும் கூட “கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்று உரைத்துள்ளார்கள். தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களை எல்லாம் ஒருவர் கணக்கெடுத்தால் அவையனைத்தையும் கற்றறிய ஒரு வாழ்நாள் போதாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புலப்படும்.




நூல்களைச் சேகரித்து தங்கள் மனங்களில் தேக்கி வைத்திருக்கும், இங்கு இணையப் போகும் இவ்வறிவாலயங்களின் மூலமாக பெறற்கரிய நூல்களின் சாரல்களை, படித்ததில் பல நல்ல விசயங்களை இரவலாகப் பெற்று வாசிக்கும் வாய்ப்பு இருப்பதோடு, பணம் கொடுத்து வாங்கிப் பிரயோசனப்படுத்த முடியாதவர்களுக்கும், அறிவுத்தானம் வழங்குவதாயிருக்கிறது. இந்த வகையிலே நூலகப் பயன்பாடு மூலம் மக்கள் அறிவைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் பற்றி மக்கள் சிரத்தையுடன் இருந்தால் கல்விச் செழுமையுள்ள சமுதாயம் தானாக உருவாகும்.




இன்று பொதுவாக மக்கள் மத்தியிலும், குறிப்பாக இளைய தலைமுறையினராகிய மாணவர் மத்தியிலும் நூலகப் பயன்பாடு குறைவடைந்து வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல. மாணவர்களிடம் வாசிக்கும் வழக்கம் வளர்ச்சி பெறும் போது தான் அறிவு விசாலிக்கிறது. அவர்தம் கல்வியும் செழுமை பெறுகிறது. ஒருவன் நூலகங்களைப் போல நிறையப் புத்தகங்களை வைத்துக்கொண்டிருப்பதால் எந்தப் பயனுமில்லை. அவற்றை வாசித்து உள்வாங்கிக் கொள்வதனாலேயே அவன் அறிவாளி ஆகிறான்.




ஆகவே வாசிப்பு, படித்தல் என்ற பழக்கங்களை நாம் என்றும், எப்பொழுதும் அனைவரிடத்தும் ஊக்குவிப்பதும் அவசியமே. இறைவன் நாடினால், கீழை இளையவனின் கீழக்கரை செய்திகள், கவிதைகளையும் தொடர்ந்து கீழை இளையவன்  பக்கத்தையும் வாசியுங்கள்.. புத்தகங்களை நேசியுங்கள்.. நீங்கள் படித்த நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பொழுதுகளை பண்படுத்துவோம்.. வாழ்க்கைதனை வளப்படுத்துவோம்.


நீங்கள் படித்த நல்ல பல அறிய தகவல்களை, நீங்கள் நம் நண்பர்களுக்கு சொல்ல நினைக்கும் முக்கிய விசயங்களை, உடனே இந்த வலை பதிவில், இடம் பெற செய்ய கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு, (உங்கள் புகைப்படத்துடன்)  அனுப்பி உங்கள் மேலான ஆதரவை எங்களுக்கு அளியுங்கள். நீங்கள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் உங்கள் பெயரிலேயே இந்த தளத்தில் பதிவு செய்யப்படும்.

மின்னஞ்சல் முகவரி :  salihhussain.ks@gmail.com

அன்புடன்,

கீழை இளையவன்