Monday 16 January 2012

கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு...


என் அன்பிற்கினிய நண்பர்களே !

மனிதனை அறிவுலகத்துக்கு இழுத்துச் செல்வது நல்ல புத்தகங்களே. அவை மனிதனைப் புனிதனாக்கிப் பண்படுத்துகின்றன. புத்தகங்களே மனிதனின் நல்ல நண்பர்கள். “கல்வி கரையில, கற்பவர் நாள் சில என்பது ஆன்றோர் வாக்கு. சான்றோர்களும் கூட “கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்று உரைத்துள்ளார்கள். தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களை எல்லாம் ஒருவர் கணக்கெடுத்தால் அவையனைத்தையும் கற்றறிய ஒரு வாழ்நாள் போதாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புலப்படும்.




நூல்களைச் சேகரித்து தங்கள் மனங்களில் தேக்கி வைத்திருக்கும், இங்கு இணையப் போகும் இவ்வறிவாலயங்களின் மூலமாக பெறற்கரிய நூல்களின் சாரல்களை, படித்ததில் பல நல்ல விசயங்களை இரவலாகப் பெற்று வாசிக்கும் வாய்ப்பு இருப்பதோடு, பணம் கொடுத்து வாங்கிப் பிரயோசனப்படுத்த முடியாதவர்களுக்கும், அறிவுத்தானம் வழங்குவதாயிருக்கிறது. இந்த வகையிலே நூலகப் பயன்பாடு மூலம் மக்கள் அறிவைப் பெற்றுக்கொள்ளும் வசதிகள் பற்றி மக்கள் சிரத்தையுடன் இருந்தால் கல்விச் செழுமையுள்ள சமுதாயம் தானாக உருவாகும்.




இன்று பொதுவாக மக்கள் மத்தியிலும், குறிப்பாக இளைய தலைமுறையினராகிய மாணவர் மத்தியிலும் நூலகப் பயன்பாடு குறைவடைந்து வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல. மாணவர்களிடம் வாசிக்கும் வழக்கம் வளர்ச்சி பெறும் போது தான் அறிவு விசாலிக்கிறது. அவர்தம் கல்வியும் செழுமை பெறுகிறது. ஒருவன் நூலகங்களைப் போல நிறையப் புத்தகங்களை வைத்துக்கொண்டிருப்பதால் எந்தப் பயனுமில்லை. அவற்றை வாசித்து உள்வாங்கிக் கொள்வதனாலேயே அவன் அறிவாளி ஆகிறான்.




ஆகவே வாசிப்பு, படித்தல் என்ற பழக்கங்களை நாம் என்றும், எப்பொழுதும் அனைவரிடத்தும் ஊக்குவிப்பதும் அவசியமே. இறைவன் நாடினால், கீழை இளையவனின் கீழக்கரை செய்திகள், கவிதைகளையும் தொடர்ந்து கீழை இளையவன்  பக்கத்தையும் வாசியுங்கள்.. புத்தகங்களை நேசியுங்கள்.. நீங்கள் படித்த நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். பொழுதுகளை பண்படுத்துவோம்.. வாழ்க்கைதனை வளப்படுத்துவோம்.


நீங்கள் படித்த நல்ல பல அறிய தகவல்களை, நீங்கள் நம் நண்பர்களுக்கு சொல்ல நினைக்கும் முக்கிய விசயங்களை, உடனே இந்த வலை பதிவில், இடம் பெற செய்ய கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு, (உங்கள் புகைப்படத்துடன்)  அனுப்பி உங்கள் மேலான ஆதரவை எங்களுக்கு அளியுங்கள். நீங்கள் அனுப்பும் தகவல்கள் அனைத்தும் உங்கள் பெயரிலேயே இந்த தளத்தில் பதிவு செய்யப்படும்.

மின்னஞ்சல் முகவரி :  salihhussain.ks@gmail.com

அன்புடன்,

கீழை இளையவன்

2 comments: